பரிசுத்த ஆவியானவரும்-ஆள்தத்தமும்

பரிசுத்த ஆவியானவரும்-ஆள்தத்தமும்

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.இன்றைக்கு மட்டும் அல்ல பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவத்தில் போலியான தந்திரமான பல உபதேசங்கள் இருந்து வந்துள்ளது.ஆனாலும் கர்த்தர் உண்மையான தேவ மனிதர்களை கொண்டு இந்த தந்திர உபதேசங்களை உடைத்து வந்துள்ளார். ஆவியானவர் வெறும் ஆவியா? அல்லது ஆள்தத்துவமுடைய ஒரு நபரா? தேவனா? இக்கட்டுரைல் பதில்..........

 



அது போலவே திரித்துவம் கிறிஸ்தவ உபதேசமா? என்ற தலைப்பில் விவாதப்பகுதியில் ஆவியானவர் என்று ஒன்று இல்லை அது வெறும் தேவனின் வல்லமை தான் என்று வாதிட்ட நண்பர்கள் வேதத்துக்கு முரணான பல காரியங்களை சொல்லி தாங்கள் சொன்னதிலும் முரண்பட்டு வருகிறார்கள்.

ஆனால் இதை படிக்கும் மற்றவர்களுக்கு தெளிவு உண்டாகும் படி ஆவியானவர் எப்படிப்பட்டவர் என்பதை வேதவாசன அதாரத்துடன் உங்களுக்கு ஒரு ஏழு காரியங்களை குறித்து வேதத்தில் இருந்தும்,மற்ற பரிசுத்தவான்களின் எழுத்துக்களில் இருந்தும் நான் கற்றுக்கொண்ட காரியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த கட்டுரை கண்டிப்பாக ஆவியானவர் குறித்ததான குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மற்ற படி திரித்துவத்தின் மற்ற காரியங்களை குறித்து கூடிய விரைவில் தள நிர்வாகிகளுடன் கலந்து தெளிவான கட்டுரை பதிக்க முயற்சி செய்கிறேன்.இந்த கட்டுரையின் முடிவான நோக்கம் ஆவியானவர் ஆள்தத்தம் உள்ளவர்.அவர் தேவத்துவதின் ஒரு அங்கமாக உள்ளார் என்பதை நிலை நாட்டுவதே.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக


(1) சிந்தை உடையவர் ஆவியானவர்.


அப்போஸ்தலனாகிய பவுல் "ரோமர் 8: 27ல் ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தனை இன்னதென்று அறிவார்"

இந்தவசனத்தின் மூலம் ஆவியானவருக்கு சிந்தை உண்டு என்பது விளங்கும். சிந்தை என்பது ஆள்தத்துவம் உள்ள அனைவருக்கும் உள்ள லட்சணமாகும். அப்போஸ்தலர் 15: 29 ல் அப்போஸ்தலனாகிய பவுல் 'பரிசுத்த ஆவிக்கும், எங்களுக்கும் நலமாகக் கண்டது" என்கிறார். இந்ந 15ம் அதிகாரத்தில் புறஜாதிகள் பின்பற்ற வேண்டிய முறைகளை ஆவியானவர் வலியுறுத்திகிறார். இவ்விடத்தில் ஆவியானவரின் சிந்தை வெளிப்படுகிறது.

(2) சித்தம் உடையவர் ஆவியானவர்


1 கொரி 12: 11ல் கண்டுள்ளபடி "இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார்"

. என்று அறியலாம் யாருக்கு எதைக் கொடுக்க வேண்டும் என்ற சித்தம் முழுமையாக ஆவியானவருக்குள் செயல்படுவதைக் காணலாம்.

(3) உணர்வு உள்ள ஆவியானவர்


ஆவியானவர் உணர்ச்சிப் பூர்வமானவர். எபேசிய விசுவாசிகள் அவரை துக்கப்படுத்தக்கூடாது என்று பவுல் போதிப்பதைக் கவனிக். எபே 4:30."அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்"

மேலும் "ஏசா 63: 10 ல்அவர்களோ கலகம்பண்ணி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்"

இதில் ஆவியானவரை இஸ்ரவேலர்கள் விசனப்படுத்தினார்கள எனக்கூறப்பட்டுள்ளது. தேவனுக்கு கீழ்ப்படியாமல் அவருக்கு விரோதமாக இருக்கும்போது பரிசுத்த ஆவியானவர் விசனப்படுகிறார். பல சமயங்களில் நம்முடைய செயல்களால் ஆவியானவர் துக்கப்படுவதை ஆவியானவரே நமக்கு உணர்த்தியுள்ளாh. எனவே ஆவியானவர் உணர்ச்சிக் உள்ளவர். எனறும், நம்மேல் அன்பைப்பொழிய அவர் எப்பொழுதும் ஆயத்தமாய் இருக்கிறார் என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும். கலா 5: 22, 23ல் ஆவியின் கனிகளினால் அவர் நம்மை நிரப்புகிறார் என்று அறியலாம்.



(4) ஆவியானவரிடம் பொய் சொல்ல முடியும்:


ஒரு ஆள் என்ற முறையிலும ஆவியானவரிடம் யார் வேண்டுமானாலும் பொய் சொல்லலாம். ஆனால் அவரை ஏமாற்றமுடியாது. காரணம் அவர் தேவனாயிருக்கிறாh. அப் 5: 3ல் "பேதுரு அவனை நோக்கி, அனனியாவே நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன"அனனியாவிடம் பேதுரு பேசும்பொழுது ஆவியானவரிடம் பொய் பேசுவதாக கண்டிக்கிறார். ஆவியானவர் ஆள்தத்துவம் உடையவராக இருக்கிறபடியால்தான் அநேகர்; அவரிடம் பொய் பேசமுயலுகின்றனர். யோவான் 16: 7-15ல் சுமார் 12 இடங்களில் 'அவர்" 'அவரை" போன்ற வார்த்தைகள் ஆவியானவருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மூல வேதத்திலும் 'அது" என்ற அஃறிணைப் பதம் பயன்படுத்தப்படவில்லை.



(5) ஆவியானவரை தூஷிக்கமுடியும்:


ஆவியானவருக்கு விரோதமான தூஷணம் இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாது என்று இயேசு கூறுவதைக் கவனிக்க. (மத் 12: 31, 32) "ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எந்தப்பாவமும் எந்தத் தூஷணமும் மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை. எவனாகிலும் மனுஷகுமரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை."

 
இப்பகுதியில் இயேசுவானவர் பரிசுத்த் ஆவியானவரை தமக்கு நிகரானவராக காட்டுகிறார். 'ஆவியானவருக்கு விரோதமான எந்த தூஷணமும் மன்னிக்கப்படாது" என்று கூறி அதன் விளைவுகளை எச்சரிக்கிறார். ஆவியானவருக்கு விரோதமான தூஷணம் என்னவென்றால் ஆவியானாவரால் நடத்தப்படும் எந்த நற்கிரியைகளையும் பிசாசினால் நடத்தப்படுகிறது என்று நாம் சொல்வதாகும். அப்படிச் சொல்வதே ஆவியானவருக் விரோதமான தூஷணமாகும்.
 
(6) மனிதர்களோடு பேசக்கூடியவர் ஆவியானவர்:


 
ஆவியானவர் ஆள்தத்துவம் உடையவராய் இருக்கிறபடியினால் அவர் தம்முடைய பிள்ளைகளோடு பேசுகிறார். அப் 10ம் அதிகாரத்தில் பேதுரு ஜெபிக்கும்பொழுது புறஜாதியரை தேவன் ஏற்றுக்கொள்ளுவதாக தரிசனத்தில் தெரிந்து கொண்டான். அப் 10: 19, 20ல் "பேதுரு அந்தத் தரிசனத்தைக் குறித்துச் சிந்தனை பண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர், இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள்.20. நீ எழுந்து, இறங்கி, ஒன்றுக்குஞ் சந்தேகப்படாமல், அவர்களுடனே கூடப்போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார்"

" என்பது தெளிவாகிறது. வேதாகம்தின் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தின சுவிசேஷத்திலும் 'ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன்" என்கிற கட்டளை அடிக்கடி கூறப்பட்டுள்ளதைக் கவனிக்க. வெளி 2: 7, 2: 11, 2: 17, 29, 3: 6, 13, 22 ஆவியானவர் நம்மோடு பேசுகிறதை கவனமாக இருந்தால் நாமும் கேட்கலாம். எனவே நம்முடைய ஆவிக்குரிய காதுகள் எப்பொழுதும் அவருடைய சத்தத்தைக் கேட்க ஆயத்தமாய் இருக்கவேண்டும்.
 
 (7) ஆவியானவரை நிந்திக்க முடியும்:
எபி 10: 29ல் 'கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்கு பாத்திரவானாயிருப்பான்" என்று கூறப்பட்டுள்ளத. நமது வார்த்தையாலும், செயலாலும் ஆவியானவரை நாம் நிந்திக்கமுடியும். 1 தெச 5: 19ல் அப்போஸ்தலனாகிய பவுல் 'பரிசுத்த ஆவியை அவித்துப்போடாதிருங்கள" என்று வலிறுருத்துவதைக் கவனிக்கவும்.


 
மேற்கண்ட 7 காரியங்களும் ஆவியானவரின் ஆள்தத்துவத்திற்கு மறுக்கமுடியாத, எதிர்பேசமுடியாத ஆதாரங்களாய் காணப்படுகின்றன. 


Note: பின்மாரி மழை பொழியப்பட்டுக் கொண்டிருக்கிற இக்காலத்தில் ஆவியானவரைக் குறித்து தெளிவாக அறிந்து கொள்ள இக்கட்டுரை உதவும்.