சாது கொச்சு குஞ்சு உபதேசி

தமிழ் நாட்டில் ஊழியம் செய்த போது தமிழ் மக்கள் இவரை சாது என அழைத்தனர். இவரது வாழ்க்கையை பற்றி வாசித்த போது இப்படியும் ஒரு ஊழியரா? என அதிசயித்துப்போனேன்.

1) கேரளாவில் உள்ள பத்தினம் திட்டா என்ற மாவட்டத்தில் பிறந்த இவர் வர்கீஸ் என அழைக்கப்பட்டார். பிறந்த வருடம் 1883
2) 11 வது வயதில் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார், 20 வயதில் தகப்பனையும் தாயையும் இழந்து வாழ்வை நகர்த்துவதற்கு சிரமப்பட்ட இவர் விவசாயம் செய்து தனது பிழைப்பை நடத்தினார். வயலில் வேலை செய்துவிட்டு வந்து இரவில் ஊழியம் செய்வாராம்.
3) வெள்ளை உடை மட்டும் அணிந்த இவர் மிகவும் எளிமையான தோற்றமும் தீர்க்கமான பார்வையும் உடையவராக விளங்கினார். எப்போதும் வேதத்தை தியானித்து கொண்டும் ஜெபித்து கொண்டும் இருப்பாராம்.
4) வாசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த அவர் தனது பிரசங்கங்களில் கதைகள்,எடுத்துக்காட்டுகள் என கேட்பவருக்கு சத்தியத்தை தெளிவாக கூறுவாராம். தேவனிடத்தில் ஆலோசனையை நாடித்தான் பல காரியங்களை நடப்பிப்பாராம்.
5) 30 வருடங்கள் தென்னிந்தியாவில் பெரிய எழுப்புதல் நடக்கும் வகையில் இவரது ஊழியம் இருந்தது. இலங்கையிலும் ஊழியம் செய்திருக்கிறார்.
6)எளிமையான உணவுப்பழக்கம், அடிக்கடி உபவாசம்,தேவைக்கு மட்டும் அத்தியாவசிய பொருட்கள் வைத்துக்கொள்வது, சுவிசேஷம் அறிவிப்பதே தலையாய கடமையாக கருதியதால் வாழ்வின் அற்ப சந்தோஷங்களையும் தியாகம் செய்தது, தாழ்மையாக இருந்து யாரிடமும் எந்த உபகாரமோ, மரியாதையோ எதிர்பார்க்காமல் வாழ்ந்தது போன்ற குணங்கள் அமையப்பெற்றது அதிசயம் தான்.
7)குதர்க்கவாதிகளும், குடிகாரர்களும் கூட இவரது பிரசங்கங்களால் மனம் மாறி ஆணடவரை ஏற்றுக்கொண்டனர்.
Cool மலையாளத்தில் உள்ளத்தை உருக்கும் பாடல்கள், புத்தகங்கள் எழுதியுள்ளார். இன்னும் இவரது பாடல்கள் மலையாள கிறிஸ்தவ மக்கள் விரும்பி கேட்கின்றனர்.
9) இடையறாத ஊழியம், உபவாசம் என ஒடிக்கொண்டிருந்த இவரை 1945 ல் ஆண்டவர் நித்திய ராஜ்ஜியத்திற்கு அழைத்துக்கொண்டார். இவரது அடக்க ஆராதனையில் அப்போதே 2 முக்கிய பிஷப்மார், 40,000 மக்கள் கலந்து கொண்டார்களாம்.